சுடச்சுட

  

  குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைப்புப் பணி ஆய்வு

  By கடலூர்,  |   Published on : 26th December 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திட்டக்குடி வட்டப் பகுதியில், குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைப்புப் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
   தமிழக அரசு தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் அட்டைகள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பயனாளிகளின் ஆதார் எண்ணை, குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திட்டக்குடி வட்டத்தில் ஆதார் எண் பதிவு, போலி குடும்ப அட்டைகள் பயன்பாடு ஆகியவை குறித்து 180-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திட்டக்குடி வட்டம், எழுத்தூர், தச்சூர் கிராமங்களில் ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா ஆய்வு செய்தார். அப்போது, நியாய விலைக் கடைகள் மற்றும் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தார்.
   கான்கிரீட் வீடுகள், கார், குளிர்சாதன வசதி உள்ளதா என குடும்ப அட்டைதாரர்களிடம் நேரில் கேட்டறிந்தார்.
   மேலும் ஆதார் எண் இணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் உள்ள ஆவணங்களையும் பார்வையிட்டார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai