சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
   அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிசம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வருகிற 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்வு அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
   இந்தக் கூட்டத்தில், கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்டரங்கில் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், காலை 8 மணி முதல் 10.15 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவுசெய்ய வேண்டும். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
   கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai