சுடச்சுட

    

    திருமாணிக்குழி பாலத்தை கட்டி முடிக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை

    By கடலூர்,  |   Published on : 26th December 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமாணிக்குழி பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண்டுமென எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
     குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்று வருகிறார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை கடலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளான
     சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, குமலங்குளம், விலங்கல்பட்டு, வானமாதேவி, திருமாணிக்குழி, கொடுக்கன்பாளையம், வெள்ளக்கரை,ராமாபுரம், காரைக்காடு, அன்னவல்லி, சேடப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
     அப்போது, திருமாணிக்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள், கெடிலம் ஆற்றில் கடந்த 6 ஆண்டுகளாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நிறைவு பெறாததால் பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது.
     எனவே உடனடியாக பாலப் பணியை நிறைவு செய்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர். மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென என்எல்ஏ உறுதியளித்தார்.
     சி.என்.பாளையம் பகுதி மக்கள், தங்களுக்கு போதுமான பேருந்து வசதி கோரியும், வானமாதேவி ஊராட்சியினர் கால்நடை மருத்துவமனை கோரியும், நடுவீரப்பட்டு மக்கள், தீயணைப்பு மீட்பு நிலையம் அமைக்கக் கோரியும் மனு அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென எம்எல்ஏ உறுதியளித்தார்.
     நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலர்கள் காசிராஜன், சிவக்குமார், நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கே.பி.ஆர்.பாலமுருகன், பி.சுப்பிரமணி, நிர்வாகிகள் ஞானசேகர், ராஜேந்திரன், ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai