சுடச்சுட

  

  பயிர்க் கடன் தள்ளுபடி: 81 ஆயிரம் விவசாயிகள் பயன்

  By கடலூர்,  |   Published on : 26th December 2016 02:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agri

   

  பயிர்க் கடன் தள்ளுபடியால் கடலூர் மாவட்டத்தில் 81 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
   இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சத்தியசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2016-ஆம் ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது.
   அதன்படி, கூட்டுறவு நிறுவனங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகளால் பெறப்பட்டு, 31.3.2016 அன்று நிலுவையில் இருந்த பயிர்க்கடன், மத்திய கால வேளாண்மைக் கடன் மற்றும் பண்ணை சார்ந்த நீண்டகாலக் கடன் ஆகிய கடன்களை தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டது.
   இந்தத் திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகள், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள் என 80,933 விவசாயிகள் ரூ.320.18 கோடி பயனடைந்துள்ளனர். இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
   இதில், விவசாயக் கடன் அட்டைத் திட்டத்தின் மூலம் (கேசிசி) பயிர்க் கடன் பெற்ற 60,121 சிறு மற்றும் குறு விவசாயிகள் ரூ.255.92 கோடியும், நகை ஈட்டின் பேரில் கடன் பெற்ற 1,188 விவசாயிகள் ரூ.6.36 கோடியும் கடன் தள்ளுபடி பெற்றனர். விவசாயம் சார்ந்த மத்தியக் காலக் கடன்களான கறவை மாடு, டயர் வண்டி மாடு, பவர் டில்லர், மோட்டார் போன்ற கடன் பெற்ற 13,515 விவசாயிகளுக்கு ரூ.46.58 கோடியும், தானே புயல் சேதம் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெற்ற கடன்களை மத்தியக் காலக் கடனாக மாற்றம் செய்யப்பட்டு நிலுவையிலிருந்த 6,109 விவசாயிகளுக்கான ரூ.11.32 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டது.
   மேலும், கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு அதற்கான சான்றும், கடன் நிலுவை இல்லை என்ற சான்றும் வழங்கப்பட்டுள்ளது.
   தற்போது கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, நிகழாண்டுக்கான புதிய பயிர்க் கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன என அதில் தெரிவித்துள்ளார்.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai