சுடச்சுட

  

  மந்தாரக்குப்பத்தில் பெண்ணிடம் தகராறு செய்ததாக இளைஞர்கள் 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
   நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மந்தாரக்குப்பத்தில் உள்ள புகைப்பட கடையில் பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை கடையில் பணியிலிருந்தபோது, தொப்புளிக்குப்பத்தைச் சேர்ந்த வேல்முருகன், தனது நண்பர்கள் ராமச்சந்திரன், சரவணன் ஆகியோருடன் கடைக்கு வந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி அப்பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். மேலும், கடையில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தினார்.
   இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை அளித்தப் புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து வேல்முருகன் உள்பட 3 பேரையும் கைதுசெய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai