சுடச்சுட

    

    அண்ணாகிராமம் ஒன்றியத்தில் பல இடங்களில் தந்தை பெரியார் நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
     சாத்திப்பட்டில் பெரியார் படத்துக்கு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரா.கந்தசாமி தலைமையிலும், அழகுபெருமாள்குப்பத்தில் பெரியார் மற்றும் எம்ஜிஆர் படத்துக்கு பாண்டியன் தலைமையிலும், எனதிரிமங்கலத்தில் ஒன்றியச் செயலர் இ.ராஜேந்திரன் தலைமையிலும் மாவட்ட திக செயலர் நா.தாமோதரன், முன்னாள் தலைவர் கோ.புத்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     நிகழ்வில், க.அமுதா, செ.நவீன், க.திராவிடமணி, நா.நாத்திகன், கு.பிரபஞ்சன், சீ.வெண்ணிலா, அக்னி பெரியார், அய்யா நாத்திகன், ஆ.ரமேஷ், ரா.சுரேஷ், சாக்ரடீஸ், ம.மாயவன், சி.அய்யனார், சு.பரசுராமன், உ.வெங்கடேசன், அ.ஆறுமுகம், ரா.ஜானகிராமன், ரா.அய்யம்மாள், ப.நாகமுத்து, நா.உஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai