சுடச்சுட

  

  ப்ரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சலுகை

  By நெய்வேலி,  |   Published on : 26th December 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிஎஸ்என்எல் நிறுவனம் தனது "ப்ரிபெய்டு' வாடிக்கையாளர்களுக்கு இருவித சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.
   இதுகுறித்து கடலூர் மற்றும் புதுச்சேரி பிஎஸ்என்எல் முதன்மைப் பொது மேலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, பேரிடர் காலங்களில் பிஎஸ்என்எல் சேவை அனைவராலும் பாராட்டப்பட்டது.
   தற்போது, செல்லிடப்பேசி "ப்ரிபெய்டு' சேவையில் வாடிக்கையாளர்களுக்கு அளவில்லா அழைப்புகள் (கால்கள்) வசதியுடன், ரூ.139 மற்றும் ரூ.339 விலைகொண்ட இரண்டு புதிய "காம்போ எஸ்டிவி'களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.139 மதிப்புள்ள "காம்போ எஸ்டிவி' பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இந்தியா முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுடன் அளவில்லா அழைப்புகளை பேசுவதுடன், 300 எம்.பி. இலவச "டேட்டா' வசதியும் பெறலாம். ரூ.339 மதிப்புள்ள "காம்போ எஸ்டிவி' பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து "நெட்ஒர்க்' அழைப்புகளுக்கும் இலவசமாகப் பேசும் வசதியுடன், ஒரு ஜிபி இலவச "டேட்டா' வசதியும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு வவுச்சர்களும் 28 நாள்கள் மதிப்பு (வேலிடிட்டி) கொண்டது. வாடிக்கையாளர்களின் "டேட்டா' தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இணைய உபயோகத்தை அதிகப்படுத்தும் வகையிலும் இந்த சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai