சுடச்சுட

  

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் அஞ்சலி

  By சிதம்பரம்,  |   Published on : 26th December 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், 6 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்லாமல் அஞ்சலி செலுத்தினர்.
   மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.புதுப்பேட்டை, சலங்கைகாரத் தெரு, இந்திராநகர், ஆரிய நாட்டு கிழக்கு தெரு, சின்னூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் விசைப் படகு பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் அஞ்சலி செலுத்தினர். இதனால், 500-க்கும் மேற்பட்ட படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டன.
   இதுதொடர்பாக சிதம்பரம் அடுத்த அன்னங்கோவில் மீனவ பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசியது: மீனவர்களின் சோகம் நிறைந்த வாழ்க்கையை ஜெயலலிதா நன்கு அறிந்தவர்.
   ஆதனால்தான் அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கினார். குறிப்பாக மீன்பிடி தடைக் காலங்களில் வழங்கப்பட்டு வந்த நிவாரணத் தொகையை ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கினார். மீன்பிடி குறைந்த காலங்களில் ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் ரூ.4,000 வழங்கும் சிறப்பு நிவாரணத் திட்டத்தினை 2011ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொண்டு வந்தார்.
   சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் எனது கோரிக்கையை ஏற்று, அன்னங்கோயில் பகுதியில் முகத்துவாரம் ஆழப்படுத்திட விதி எண் 110-ன்கீழ் அறிவிப்பு வெளியிட்டு, உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க ஆணையிட்டவர் ஜெயலலிதா என்றார் கே.ஏ.பாண்டியன்.
   நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை நகரச் செயலர் மாரிமுத்து, ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், கதர் வாரிய முன்னாள் உறுப்பினர் தன.ஜெயராமன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆர்.வி.சுவாமிநாதன் மற்றும் 6 மீனவ கிராமப் பிரதிநிதிகள் சிறு, குறு மீன் வியாபாரிகள் மற்றும் விசைப்படகு பாதுகாப்பு சங்கத்தினர், ஊர் மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai