சுடச்சுட

  

  மாநில பூப்பந்து போட்டி: திருவள்ளூர் அணி சாம்பியன்

  By கடலூர்,  |   Published on : 26th December 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து போட்டியில், திருவள்ளூர் மாவட்ட ஆண்கள் அணி கோப்பையை வென்றது.
   தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம், கடலூர் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம், கடலூர் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மாநில அளவிலான 62-ஆவது சீனியர் ஆடவர், மகளிர் பூப்பந்தாட்டப் போட்டி கடலூர் அருகே வைரங்குப்பத்தில் நடைபெற்றது.
   சனிக்கிழமை தொடங்கி இரு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், மாநிலம் முழுவதிலும் இருந்தும் 48 ஆண்கள் அணிகளும், 27 மகளிர் அணிகளும் பங்கேற்றன.
   ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் திருவள்ளூர் மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. திருச்சி மாவட்டம் 2-ஆவது இடத்தைப் பிடித்தது. மகளிர் பிரிவில் நாமக்கல் மாவட்டம் முதலிடமும், திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடமும் பெற்றன.
   பரிசளிப்பு விழாவுக்கு சங்கத் தலைவர் ஏ.கே.நடேசன் தலைமை வகிக்க, துணைத் தலைவர் பி.எஸ்.பாலகுமார் முன்னிலை வகித்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் எம்.ராஜா, மாவட்ட பூப்பந்தாட்டக் கழக பொதுச் செயலர் வி.எழிலரசன், துணைத் தலைவர் ஏ.சீனுவாசன், பொருளர் இ.பார்த்திபன், மாவட்ட தடகள கழகச் செயலர் டி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட கைப்பந்து கழகச் செயலர் ஜி.அசோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டி.கார்த்திகேயன் வரவேற்க, சங்கச் செயலர் பி.வைத்தியநாதன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai