சுடச்சுட

    

    வேப்பூர் அருகே மின் வேலியில் சிக்கி இளைஞர் சாவு

    By கடலூர்,  |   Published on : 26th December 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கரும்புத் தோட்ட மின் வேலியில் சிக்கிய இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
     வேப்பூர் அருகே உள்ள களத்தூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் வினித் (20). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை இயற்கை உபாதைக்காக அந்தப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டப் பகுதிக்குச் சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்புகளை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வயலைச் சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளார். அந்த வழியாக நடந்து சென்ற வினித், செல்வராஜின் வயலில் இருந்த மின் வேலியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     தகவலறிந்த வேப்பூர் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனர். சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட எஸ்.பி. செ.விஜயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விவசாயிகள் தங்களது நிலத்தில் உரிய அனுமதியின்றி மின்வேலி அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைக்கப்பட்ட மின்வேலி குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai