சுடச்சுட

  

  அண்ணாமலைப் பல்கலை.யில் தொழில் மேம்பாட்டுக்கு கண்காட்சியுடன் இணைந்த போட்டி

  By சிதம்பரம்  |   Published on : 27th December 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் மேலாண்மைத் துறை, இந்திய தேசிய கண்டுபிடிப்பு அமைப்புடன் இணைந்து, தொழில் மேம்பாட்டுக்கான புதிய சிந்தனைகளின் சமூக பரவல் மற்றும் தகவல் பரப்புதல் குறித்த கண்காட்சியுடன் இணைந்த போட்டியை நடத்துகிறது.
  டிச.28. 29 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இதில் 50-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை ஒரு சந்தை முகாமாக வாக் த டாக்:
  அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் சிந்தனை பரிமாற்றம்-16 என்ற தலைப்பில் ஒரு போட்டியாக கடலூர் மாவட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  மேலும், இந்திய அரசின் ஹெக்கத்தான் 2017 போட்டியின் ஒரு விழிப்புணர்வு முகாமாக பல்கலைக்கழக மேம்பாட்டுக்கான சிந்தனைகளும் வரவேற்கப்படுகின்றன.
  பரிசோதனை முறையில் இணையதளம் மூலமாக 3000க்கும் மேற்பட்ட நபர்கள் பங்குபெறும் வகையில் http:அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
  ஐடியாஸ்கேல்.காம் (http:annamalaiuniversity.ideascale.com) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  புதிய சிந்தனைகள் பதிவு செய்ய படிவம் மற்றும் இணையதள வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது http:அண்ணாமலைப்பல்கலைக்கழகம்.ஏசி.இன்ஐஏயுஎஸ்இன்டக்ஸ்.பிஹெச்பி (http:annamalaiuniversity.ac.iniausindex.php).
  வரும் 28ஆம் தேதி காலை 10:00 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் துணைவேந்தர் செ.மணியன் தொடக்கி வைக்கிறார். மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். 29ஆம் தேதி பிற்பகல் 3:30 மணியளவில் கடலூர் மாவட்ட எஸ்.பி. சி.விஜயகுமார், சிறந்த சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுகிறார்.
  நிகழ்ச்சி ஏற்பாடுகளை பதிவாளர் க.ஆறுமுகம் தலைமையில் மேலாண்மைத் துறைத் தலைவர் சி.சமுத்ரராஜகுமார், ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.செல்வராசு, முனைவர் ஆர்.பாஸ்கர், முனைவர் டி.சபேசன் ஆகியோர் செய்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai