சுடச்சுட

  

  குறைதீர் கூட்டத்தில் 66 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா

  By கடலூர்,  |   Published on : 27th December 2016 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நரிக்குறவர்கள், மலைக்குறவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் 66 பேருக்கு, திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
   கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 311 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுக்கு என மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு ஆட்சியர் நேரில் சென்று அவர்களிடம் மனுக்களைப் பெற்றார்.
   பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உள்பட்டும் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
   மேலும், காட்டுமன்னார்கோவில் வட்டம், ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டம், தேத்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர், மலைக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர் ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ச.சா.குமார், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கோவிந்தன், உதவி ஆணையர் (கலால்) முத்துகுமாரசாமி உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai