சுடச்சுட

  

  கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

  By சிதம்பரம்,  |   Published on : 27th December 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என விவசாயிகள், கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் போதிய மழை இல்லாததால், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள குண்டலப்பாடி, ஜெயங்கொண்டப்பட்டினம், பெராம்பட்டு, சிவபுரி, வல்லம்படுகை, வடக்குமாங்குடி, தெற்குமாங்குடி, சக்திவிளாகம், நளம்புத்தூர், புளியங்குடி, நந்திமங்களம், பருத்திக்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உப்புநீர் உள்புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
   இதனால் விவசாயம், குடிநீர் கேள்விக் குறியாகி உள்ளது.
   எனவே, நிலத்தடி நீர்மட்டம் உயர கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க, தமிழக அரசை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
   இதுதொடர்பாக கிராம மக்கள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கொள்ளிடம் ஆற்று பூங்கா வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் தலைமை வகித்துப் பேசினார்.
   முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் பி.கே.காந்தி, ரா.மாமல்லன், திருவரசமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோவி.மணிவண்ணன், சந்தானக்குமார், சந்திரசேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரகுமார், விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன்ஸ ரங்கநாயகி, என்.ஆர்.எஸ்.பாண்டியன், கந்தன், பிற்படுத்தப்பட்டோர் பேரவை இணைப் பொதுச்செயலாளர் அரங்க.பாஸ்கர், நீலமேகம், தீத்திக்குடி சுந்தரமூர்த்தி உள்ளிட்ட சுமா ர் 500 பேர் பங்கேற்றனர்.தமிழக அரசு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே போர்க்கால அடிப்படையில் தடுப்பணை கட்டித்தர வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai