சுடச்சுட

  

  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு, சிதம்பரம் மேலவீதியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, மூப்பனார் பேரவை மற்றும் மாவட்ட மகளிரணியினர் இணைந்து உழவாரப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.
   கோயில் வளாகத்தில் உள்ள முள்செடிகள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். உழவாரப் பணிக்கு நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் உழவாரப் பணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.
   நிர்வாகிகள் மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தவைவர் ராஜா.சம்பத்குமார், தொண்டரணித் தலைவர் தில்லை கோ.குமார், மாவட்ட மகளிரணித் தலைவர் கே.ராஜலட்சுமி, பொதுச்செயலாளர் பாபு.சந்திரசேகரன், எஸ்சி., எஸ்டி பிரிவுச் செயலாளர் எம்.கே.பாலா, நிர்வாகிகள் ஆர்.சம்பந்தமூர்த்தி, சின்ராஜ், ஜி.ஆறுமுகம், ஜெனகம், தில்லைசெல்வி, சுப்புலட்சுமி, மீனாசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai