சுடச்சுட

  

  சுனாமி 12-ஆம் ஆண்டு நினைவு தினம், சிதம்பரத்தை அடுத்த கிள்ளை, சாமியார்பேட்டை, வேளங்கியராயன்பேட்டை மற்றும் புதுக்குப்பம் கடற்கரை கிராமங்களில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
   கடந்த 2004-ஆம் ஆண்டு டிச.26-ஆம் தேதி சுனாமி பேரலையால் சிதம்பரம் அருகே கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த 342 பேர் இறந்தனர். இதில் 93 குழந்தைகளும், 147 பெண்களும் அடங்குவர்.
   கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமிப் பேரலையின் போது 648 பேர் இறந்தனர்.
   சுனாமி பேரலையில் உயிரிழந்த மக்களுக்கு 12-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவிடங்களில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ மலர்வளையம் வைத்தும், கடலில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் அசோகன், அவைத் தலைவர் கோவி.ராசாங்கம், பேரவைச் செயலாளர் வீராசாமி, ஊர் நிர்வாகிகள் சிதம்பரம், கோவிந்தன், மகாலிங்கம், கோவிந்தசாமி, பக்கிரிசாமி, ஏழுமலை, மாரியப்பன், பாரதி மற்றும் மீனவ கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் சாமியார்பேட்டை மேல்நிலைப் பள்ளி, இஷா வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai