சுடச்சுட

  

  டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்: பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை

  By நெய்வேலி  |   Published on : 27th December 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
   அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் மாநில செயற்குழுக் கூட்டம், நெய்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டத் தலைவர் காப்பான்குளம் காமராசு தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த செயலர் வீரவன்னியவேங்கன் வரவேற்றார்.
   மாவட்ட துணைச் செயலர் சிவக்குமார், இணை பொதுச் செயலர்கள் அரங்கபாஸ்கர், ரவிச்சந்திரன், திருமலைராஜன், செயற்குழு உறுப்பினர் குலசேகரன், இளைஞரணி நிர்வாகிகள் டெல்டா விஜயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
   சிறப்பு அழைப்பாளராக பேரவையின் அகில இந்திய பொதுச் செயலர் வீரவன்னியராஜா பங்கேற்றுப் பேசினார்.
   மாநிலத் தலைவர் லட்சுமிகாந்தன் பிள்ளை, மாநிலச் செயலர் சந்திரசேகர், மாநில இணை பொதுச் செயலர் ஆனந்த், மாநில செயற்குழு உறுப்பினர் அன்பரசன், விநாயகம், ரமேஷ், மகளிரணி நிர்வாகிகள் வனிதா, கொளஞ்சியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   கூட்டத்தில், காவிரி டெல்டா பாசன பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
   என்எல்சியில் பணிபுரியும் நிரந்தர, இன்கோ, ஹவுசிகாஸ் சொசைட்டி, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பொங்கல் முன்பணம் வழங்க வேண்டும். அண்ணாமலை பல்கலை.யில் நிர்வாகச் சீர்கேடுகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
   கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதோடு, டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai