Enable Javscript for better performance
நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By கடலூர்,  |   Published on : 27th December 2016 09:12 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் டிச.28-ம் தேதி நடைபெறுகிறது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச.28 (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
     மாவட்ட வருவாய் அலுவலர் கூட்டத்துக்கு தலைமை வகித்து நுகர்வோரிடம் குறைகளை கேட்டறிகிறார். மாவட்டத்துக்கு உள்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.
     எனவே, நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    kattana sevai