சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைதானார்.
     பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம், புதுக் காலனியைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (15). என்.எல்.சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
     கடந்த 23-ஆம் தேதி அதிகாலை ஜெயப்பிரகாஷ் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார். இதனைக் கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயப்பிரகாஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
     அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் பழனியப்பனுக்கும், மாணவர் ஜெயப்பிரகாஷூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரம் அடைந்த பழனியப்பன் கத்தியால் ஜெயப்பிரகாஷை வெட்டியதாகவும் கூறப்பட்டது.
     முத்தாண்டிக்குப்பம் போலீஸார் ஜெயப்பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான பெட்டிக்கடை உரிமையாளர் பழனியப்பனை 4 தனிப் படைகள் அமைத்து தேடி வந்தனர்.
     இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பழனியப்பனை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியதில், கடையில் தொடர்ந்து பொருள்கள் திருடு போனதாதவும். 22-ஆம் தேதி இரவு திருடனை பிடிக்க கடையில் தங்கி இருந்தபோது, 23-ஆம் தேதி அதிகாலை பொருள்களை திருட வந்த ஜெயப்பிரகாஷை மடக்கிப் பிடிக்க முயன்ற போது, தாக்கியதால் கத்தியால் வெட்டியதாகவும் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai