சுடச்சுட

  

  மாணவர்களின் திறனை மேம்படுத்த அண்ணாமலை பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

  By சிதம்பரம்,  |   Published on : 27th December 2016 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அண்ணாமலைப் பல்கலை.யில், மாணவர்களின் வேலைபெறும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக, அரிமா எக்ஸிம் பி.லிமிடெட் நிறுவனத்துடன், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டது.
   இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். அதில் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி, நல்ல பேச்சாற்றல் ஆகியவற்றை மேம்படுத்தி வேலைவாய்ப்பை பெறுவதற்கான வழிவகை செய்யப்படும் என்று துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார். துணைவேந்தர் செ.மணியன் முன்னிலையில் காம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அரிமா எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவன துணைத் தலைவர் வீனா சுதாகர், பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
   இந்த நிகழ்ச்சியில் கலைப்புல முதல்வர் எம்.நாகராஜன், இந்திய மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன், மேலாண்மைத் துறை தலைவர் சி.சமுத்திரராஜகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai