சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

    By கடலூர்,  |   Published on : 27th December 2016 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
     மாற்றுத் திறனாளிகளின் லட்சிய முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச்செயலர் பொன்.சண்முகம் ஆகியோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷை சந்தித்து மனு அளித்தனர்.
     அந்த மனுவில், வீடு, வீட்டுமனைப் பட்டா இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு பட்டா வழங்கிடும் வகையில் ஒவ்வொரு வட்டம் தோறும் முகாம் நடத்த வேண்டும்.
     நகராட்சிகளில் தற்போது துப்புரவுப் பணியாளர்கள் பயன்படுத்தும் 3 சக்கர மோட்டார் வண்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளவர்களது திருமணத்தை கலப்புத் திருமணமாக பதிவு செய்து அதற்கான சலுகைகளை வழங்க வேண்டும்.
     மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பாலமுருகன், மகளிரணி துணைச் செயலர் எஸ்.சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai