சுடச்சுட

    

    நெல்லிக்குப்பத்தில் அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம், முஸ்லிம் கருமர தெருவைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன் மகன் அப்துல் ரகுமான் (20). இவர், செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பெரோஸ்கானை பைக்கில் ஏற்றிக்கொண்டு வெளியில் சென்றார்.
     இவர்கள், நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் சென்ற போது அந்த வழியே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், அப்துல்ரகுமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     காயமடைந்த பெரோஸ்கான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, பெரோஸ்கான் அளித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai