சுடச்சுட

    

    அரசு எஸ்சி, எஸ்டி ஊழியர் சங்கம் எஸ்.பி.யிடம் மனு

    By கடலூர்,  |   Published on : 28th December 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்கத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
     தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் கே.பி.ஜி.திலகர் மற்றும் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், சங்கத்தின் பெயர் மற்றும் பதிவு எண்ணை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
     இதுகுறித்து, ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிலர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தது. அவர்கள் சங்கத்திலிருந்தும் நீக்கப்பட்டனர். தற்போதும் அவர்கள் சங்கத்தின் பெயர் மற்றும் பதிவு எண்ணை பயன்படுத்தி வருகின்றனர்.
     எனவே, சங்க விதிகளுக்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai