சுடச்சுட

  

  சாலை அமைத்ததில் முறைகேடு: பொதுநல இயக்கங்கள் போராட்ட அறிவிப்பு

  By கடலூர்,  |   Published on : 28th December 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாலை அமைத்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்ததப் போவதாக கோரி போராட்டம் நடத்தப்போவதாக பொது நல இயக்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
   இதுகுறித்து கடலூர் அனை த்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நிர்வாகிகள் எம்.நிஜாமுதீன், வெண்புறா சி.குமார், பி.பண்டரிநாதன் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
   திருப்பாதிரிப்புலியூரையும் கம்மியம்பேட்டையையும் இணைக்கும் வகையில் படைவீரர்கள் அலுவலகம் அருகிலுள்ள கெடிலம் ஆற்றின் கரையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சாலை அமைக்கப்பட்டது.
   சாலைப் பணியின் போதே, அமைக்கப்படும் சாலையின் தரம் குறைவாக இருப்பதாகவும், விளக்குகள் அமைக்கப்படாததையும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
   இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது படைவீரர்கள் நல அலுவலகச் சாலை மீண்டும் குண்டும் குழியுமாக மாறியது. இதனை செப்பனிட ரூ.90 லட்சத்தில் ஒப்பந்தப்பணிக்கு விடப்பட்டது.
   சாலை சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மீண்டும் அதே இடங்கள் குண்டும் குழியுமாக மாறி விட்டன.
   இதனால் அந்தப் பகுதியில் தினமும் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதற்குக் காரணம் ரூ.90 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணி தரம் இல்லாததே ஆகும். எனவே, மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், குண்டும் குழியுமான சாலையை மேம்படுத்திடவும் வலியுறுத்தி கூட்டமைப்பு சார்பில் வரும் 30-ஆம் தேதி சாலையில் உள்ள குழியில் எச்சரிக்கை பலகை நட்டு போக்குவரத்துக்கு உதவி செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai