சுடச்சுட

  

  சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம்: அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனை

  By சிதம்பரம்,  |   Published on : 28th December 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு அனைத்துத் துறை அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வரும் ஜன.2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
   முக்கியத் திருவிழாக்களான தேர் மற்றும் ஆருத்ரா தரிசன உற்சவம் ஜன.10, 11 தேதிகளில் நடைபெறுகிறது. மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்வது குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுதீட்சிதர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசன், நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலர் கண்ணன் தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர், காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளமுருகன், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், துணைத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், பக்தர் பேரவை நிர்வாகிகள் சி.எஸ்.பாலசுந்தரம்,
   ஆர்.புவனேஷ் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுமதி, தீயணைப்பு நிலைய அலுவலர் தினகர், கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத்துக்கு கண்காணிப்புக் கேமரா பொருத்துவது, தரிசனத்தை பிற்பகல் 2 மணிக்குள் முடிப்பது, தேர்த் திருவிழா மற்றும் தரிசனத்தின் போது போதியளவில் போலீஸாரை பணியில் ஈடுபடுத்தப்படுத்துவது, போக்குவரத்து மாற்றம் செய்வது, தேர் மற்றும் தரிசன நாள்களில் அசைவ ஹோட்டல்களை மூடுவது, மதுபானக் கடையை மூட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது, நகராட்சி நிர்வாகம் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, தயார் நிலையில் தீயணைப்புத் துறை வாகனம், அவசரகால ஊர்தி ஆகியவற்றை கோயில் வளாகத்தில் நிறுத்துவது, குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலைகளை சீரமைப்பது, அன்னதானம் வழங்குபவர்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பத்மநாபன் மற்றும் காவல் துறையில் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்
   என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai