சுடச்சுட

  

  திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகள் உருவாக வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

  By கடலூர்,  |   Published on : 28th December 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகள் மாவட்டத்தில் உருவாக வேண்டும் என்றார் ஆட்சியர் த.பொ.ராஜேஷ்.
   முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் - திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கமற்ற ஊராட்சிகளை உருவாக்குவது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்தில் ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்துப் பேசியது:
   மலம் மற்றும் சிறுநீர் கழிக்க கழிப்பிடங்களை பயன்படுத்துவது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நிகழாண்டில் 100 சதம் கழிப்பிட வசதி கொண்ட மாவட்டமாக கடலூரை உருவாக்க வேண்டும்.
   இதற்காக பொதுமக்களிடையே கழிப்பிடங்கள் கட்டுவதற்கும், அதனை பயன்படுத்துவதற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
   அரசு மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
   ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும் அவர்களுக்கென ஒரு குக்கிராமத்தை தத்துகொடுத்து அங்குள்ள பிரச்னைகளை ஆராய்ந்து, குறிப்பாக கழிப்பிட வசதி, அதற்கான தீர்வு காண்பதற்கான திட்டங்களை வகுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் அலுவலர்கள் தங்களின் சொந்த கிராமம் அல்லது தங்களுக்கு விருப்பப்பட்ட குக்கிராமத்தை தத்தெடுத்துக் கொள்ளலாம்.
   திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கமற்ற ஊராட்சிகளை உருவாக்கும் இந்தப் பணி, ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள தூய்மையான, பசுமையான கடலூர் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
   இந்தத் திட்டத்தில் விருப்பமுள்ளவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுவர்.
   இந்தத் திட்டத்திற்காக அனைத்துத் துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.
   கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ச.சா.குமார், துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.ஆர்.ஜவஹர்லால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி,நகராட்சி செயற்பொறியாளர்கள் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai