சுடச்சுட

  

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

  By கடலூர்,  |   Published on : 28th December 2016 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
  இதுகுறித்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர்
  இரா.வீரக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் ஜனவரி 4-ஆம் தேதி வரை அரசுத் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  நேரடி தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1-இல் மொழிப்பாடத்தில் தமிழை மட்டுமே முதல் மொழிப் பாடமாக கண்டிப்பாக தேர்வெழுதுதல் வேண்டும்.
  1.3.2017 அன்று பதினான்கரை வயதை நிறைவு செய்தவர்கள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள், திறந்த வெளிப் பள்ளியில் சி லெவல் சான்றிதழ் பெற்றவர்கள் முதல் முறையாக தேர்வெழுத விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  ஏற்கெனவே, தேர்வு எழுதி தோல்வியுற்றவர்கள் எனில் றிவியல் பாடத்தைப் பொறுத்தவரை செய்முறை பயிற்சி பெற்று செய்முறைத் தேர்வு எழுதிய பின்னரே அறிவியல் பாட கருத்தியல் தேர்வை எழுத இயலும். எனவே, அறிவியல் செய்முறை வகுப்பில் பதிவு செய்திடல் வேண்டும்.
  மேலும், தகல்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai