சுடச்சுட

    

    பல்கலைக்கழகத் தேர்வு:  கடலூர் அரசுக் கல்லூரி சிறப்பிடம்

    By கடலூர்,  |   Published on : 28th December 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வில் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
     இதுகுறித்து கல்லூரி முதல்வர் க.மனோகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், கடலூர் அரசு பெரியார் கல்லூரி உள்பட 110 அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
     இதில், எம்.ஏ. (தமிழ்) மாணவி த.மஞ்சுளா, எம்.எஸ்.சி. (வேதியியல்) மாணவி பா.சந்தியா, விலங்கியல் பாட மாணவி ச.அதிஷ்டலட்சுமி, பிஎஸ்சி (புள்ளியியல்) மாணவி எ.அனுசுயா ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றனர்.
     அதேபோன்று, எம்.எஸ்.சி. (வேதியியல்) மாணவி சு.சிவப்பிரியா 5-வது இடம், இயற்பியல் மாணவி ச.ஹேமா 7-வது இடம், எம்.ஏ. பொருளியல் பாடத்தில் மாணவி ஜோ.தேவிகா 5-வது இடம், மாணவர் இரா.தீபன்ராஜ் 6-வது இடம், மாணவி ஆ.மாலதி 8-வது இடத்தை பிடித்தனர் என்று தெரிவித்துள்ளார்.
     பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai