சுடச்சுட

  

  அண்ணாமலைப் பல்கலை.யில் தொழில் மேம்பாட்டுக் கண்காட்சி

  By DIN  |   Published on : 29th December 2016 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் மேலாண்மைத் துறை, இந்திய  தேசிய கண்டுபிடிப்பு அமைப்புடன் இணைந்து 2016-ஆம் ஆண்டுக்கான தொழில் மேம்பாட்டுக்கான "புதிய சிந்தனைகளின்  சமூக பரவல் மற்றும் தகவல் பரப்புதல்' குறித்து, கண்காட்சியுடன் இணைந்த போட்டியை நடத்தியது.
  2 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழா பல்கலைக்கழக  சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
  பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன், கடலூர் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.  
  விழாவில் மேலாண்மை துறைத் தலைவர் பேராசிரியர் சி.சமுத்திரராஜகுமார் வரவேற்றார்.  துணைவேந்தர் செ.மணியன் தனது தொடக்க உரையில், புதிய கண்டுபிடிப்புகள் மக்களிடையே அறிமுகப்படுத்தலின் அவசியம் மற்றும் அதில் பல்கலைக்கழகத்தின் பங்கு பற்றி எடுத்துரைத்தார்.
  ஆட்சியர் த.பொ.ராஜேஷ் ஆற்றிய சிறப்புரையில், புதிய கண்டுபிடிப்புகளின் அவசியம் குறித்தும், அதில் மாணவர்களின் பங்கு பற்றியும் விளக்கிக் கூறினார்.
  பல்கலைக்கழக மொழிப்புல முதல்வர் மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பேராசிரியர்  வி.திருவள்ளுவன் வாழ்த்துரையாற்றினார்.
  மத்திய கண்டுபிடிப்பு மைய சேவா அமைப்பாளர் பி.விவேகானந்தன் தனது உரையில், பண்டைக் காலம் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்பில் மாணவர்களின் பங்கு பற்றி  விளக்கினார். மேலும், பல்கலைக்கழக பல்வேறு புலங்களைச் சார்ந்த 62 ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட  ஆட்சியர் பாராட்டினார்.  பொறியியல் துறை பேராசிரியர்  ஆர்.பாஸ்கர் நன்றி கூறினார்.
  பல்வேறு புலங்களைச் சார்ந்த மாணவர்கள் காட்சிப்படுத்திய கண்காட்சியை துணைவேந்தர், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அதன் விளக்கங்கங்களை  கேட்டறிந்தனர்.
  விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் க.ஆறுமுகம், கலைப்புல முதல்வர் எம்.நாகராஜன், வேதியியல் துறைத் தலைவர் எஸ்.கபிலன், கல்வித் திட்ட இயக்குநர் பேராசிரியர் கே.மணிவண்ணன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் பேராசிரியர் ராம.கதிரேசன் மற்றும் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள்,  மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  விழா ஏற்பாட்டினை மேலாண்மைத் துறை பேராசிரியர் அ.செல்வராசு செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai