சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியர் அப்துல் கலாம் விருதுக்குத் தேர்வு

    By DIN  |   Published on : 29th December 2016 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் டி.ரவி மைசின் , பாரத் ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
     அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல் துறை சுற்றுச்சூழல் உயர் நுட்பவியல் பிரிவு இணைப் பேராசிரியராக பணியாற்றி  வருபவர் ரவி மைசின்.
    இவருக்கு தில்லியில் உள்ள இந்தியன் இண்டர்நேஷனல் பிரண்ட்ஷிப் சொசைட்டி என்ற அமைப்பு, பார்த ரத்னா டாக்டர்  ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
     இந்த ஆண்டுக்கான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும், உலக அளவிலான மாசுக் கட்டுப்பாட்டு பிரிவில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.   2017, ஜன.14-ம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் ரவி மைசினுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai