சுடச்சுட

  

  கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல்  3 இடங்களைப் பிடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
  ரோட் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 36 மாணவ, மாணவிகளுக்கு ரூ.27 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.மதிவாணன் சிறப்பு அழைப்பாளராக  பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
  தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி, தூய்மை இந்தியா இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.வேலுமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் எம்.ராஜா, மாவட்ட புள்ளியியல் அலுவலர் பி.அழகப்பன், மாவட்ட சமூகநல அலுவலர்  சி.மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
  தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஹசீனாஉஸ்மான் வரவேற்க, திட்ட மேலாளர் எஸ்.மாஜிசிங் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai