சுடச்சுட

  

  காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும்: தவாக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

  By DIN  |   Published on : 29th December 2016 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைத்து, தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் அரங்கில் தவாக அவசர பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாநில துணை பொதுச் செயலர்கள், மாவட்டச் செயலர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
  கூட்டத்தில், கருப்புப் பணம் ஒழிப்புக்கு உயர் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தவாக வரவேற்கிறது.
  ஆனால், முன்னேற்பாடுகள் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் பண பிரச்னையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
  நாடு முழுவதும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
  சோதனையில் புதிய ரூ.2,000 நோட்டுகள் கோடிக் கணக்கில் கைப்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
  காவிரி டெல்டா மாவட்டத்தில் 45 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
  விவசாயிகளின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவிப்பது, மேலும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
  காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைத்து, தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai