சுடச்சுட

    

    விருத்தாசலம் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் கம்மாபுரம் ஊராட்சி  ஒன்றிய அதிகாரிகளைச் சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனர்.
    விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம், கோ.மாவிடந்த ஊராட்சி பொன்னேரி  கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    இந்தப் பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள்,  மினி குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தத் தொட்டிகளில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் பழுப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வருகிறது.
    இதனால், கடந்த ஒரு மாதமாக மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், விவசாய நிலம் மற்றும் அருகாமையில் உள்ள கிராமத்திற்குச் சென்று  குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனராம்.
    எனவே, தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையெனில், விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
     மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai