சுடச்சுட

  

  சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 29th December 2016 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என சத்துணவுப் பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
   தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் விருத்தாசலம், புதுப்பேட்டை தனியார் பள்ளி
  வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
   மாவட்ட துணைத் தலைவர் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலர் குமர.செல்வராசு வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர்
   வ.ஆறுமுகம், துணைத் தலைவர் எஸ்.நேரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
   பணி ஓய்வு சத்துணவுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சே.க.விஜயபாண்டியன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில பிரசார செயலர் ந.சுந்தர்ராஜா, முன்னாள் மாவட்டச் செயலர் எம்.கோவிந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
   மாவட்டத் தலைவர் மு.கணேசன், முன்னாள் மாவட்டச் செயலர் மா.சுப்பிரமணியன், பிரசார செயலர் ஆர்.ஞானஜோதி, ஒன்றியச் செயலர்கள் நல்லூர் த.நாகசூர்யா, மங்களூர் உ.ஹேமலதா, ஒன்றியத் தலைவர்கள் கம்மாபுரம் ஆர்.பாலகிருஷ்ணன், விருத்தாசலம் ஜி.சபாநாயகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.செல்லவேல், சீ.இளங்கோவன்,
  எம்.கொளஞ்சிநாதன், எஸ்.மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   கூட்டத்தில், மாவட்டத் தலைவராக குமர.செல்வராசு, செயலராக பி.சுப்பிரமணியன், பொருளராக ஏ.உஷாராணி, மாநில செயற்குழு உறுப்பினர்களாகஎம்.கொளஞ்சிநாதன், த.நாகசூர்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
   இதில், தமிழக முதல்வராக பணியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் பணி சிறக்க வாழ்த்துவது, அரசாணை எண்:2342009-ன் படி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவையுடன் ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சத்துணவு வழங்கும் செலவினத் தொகையை நிலுவையின்றி முன்மானியமாக வழங்க வேண்டும், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள சிறப்பு சேமநல நிதியை உடனே வழங்க வேண்டும்
  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai