Enable Javscript for better performance
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது- Dinamani

சுடச்சுட

    

    சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

    By DIN  |   Published on : 29th December 2016 02:02 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டார்.
    புதுச்சேரி மாநிலம், வேல்ராம்பட்டு, மறைமலை நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(40). இவர், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடந்தி வந்து கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விற்பனை செய்து வந்தாராம்.
     பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் ரோந்துப் பணியின் போது கைது செய்யப்பட்டார். இவர் மீது சாராயம் விற்றது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். எனவே, தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபடும் பாலசுப்பிரமணியனின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் பரிந்துரை செய்தார்.
     இப்பரிந்துரையை ஏற்ற ஆட்சியர் டி.பி.ராஜேஷ், பாலசுப்பிரமணியனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    kattana sevai