சுடச்சுட

  

  சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்: ஜன.11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

  By DIN  |   Published on : 29th December 2016 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசன பெருவிழாவை முன்னிட்டு, ஜன.11-ஆம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா வரும் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
  இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 21-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்
  ஜன.11-ஆம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும், பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai