சுடச்சுட

  

  கடலூர், சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
  தமிழ் மாநில காங்கிரஸ், கடலூர் நகர கமிட்டி சார்பில், ஜி.கே.வாசனின் 52-வது பிறந்த நாள் விழா கட்சி அலுவலகமான நேரு பவனில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
   நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்டச் செயலர்கள் அலமு தங்கவேல், சேகர், வட்டாரத் தலைவர் மீன் குமாரசாமி, மாணவரணிச் செயலர்கள் வினோத், சீனுவாசன் முன்னிலை வகித்தனர்.
   மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் கேக் வெட்டினார், மாவட்டத் தலைவர்கள் ஞானசந்திரன், ஏ.நெடுஞ்செழியன் கட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
  எஸ்சி., எஸ்டி., பிரிவுத் தலைவர் காராக் கண்ணன், மகளிரணித் தலைவர் பத்மினி, மாவட்ட இளைஞரணி ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  சிதம்பரம்: சிதம்பரத்தில் கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மற்றும் மாவட்ட கமிட்டி சார்பில், ஜி.கே.வாசன் 52-வது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
   சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் எல்.ஆபீத்உசேன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, பொதுச்செயலாளர் கே.நாகராஜ், இளைஞரணி மாவட்டத் தலைவர் கே.ரஜினிகாந்த்  முன்னிலை வகித்தனர்.
  காதுகேளாதோர் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு உணவுப் பொருள்கள், ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.   நடராஜர் கோயிலில் சிறப்பு அர்ச்சனையும், பள்ளிவாசல், தர்காவில் சிறப்புப் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
  கடலூர் மத்திய மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.  விழாவில் நிர்வாகிகள் பி.கே.காந்தி, ராஜராஜன், குமார் இன்பரசு, வண்டிகேட் நடராஜ், வேல்முருகன், மணிகண்டன், சிங்காரவேல், கணேஷ், இரும்பு ஆறுமுகம், முகமதுஉமர், ஜாகீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai