சுடச்சுட

  

  திட்டக்குடி வட்டம், இடைச்செருவாய் கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் மகன் விஜயகாந்த். இவரது, டிராக்டர் கடந்த 7 ஆம் தேதி காணாமல் போனது.
  இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
  இந்த நிலையில், புதன்கிழமை காலை திட்டக்குடி பிரதான சாலை அருகே காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டிராக்டர் ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை  அளித்துள்ளார்.
  பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், செந்துரை வட்டம்,சிறுகரம்பலூரைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் சதீஷ்குமார்(36) எனவும், இடைச்செருவாயில் டிராக்டர் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான டிராக்டரை மீட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai