சுடச்சுட

    

    தில்லைக் காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.92 லட்சம்

    By DIN  |   Published on : 29th December 2016 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 193 ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளது.
     இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர்கள் சீனுவாசன், ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
     கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், ராஜ்குமார், முத்துக்குமரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 193 ரூபாய் கிடைத்தது.
     மேலும், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 25 கிராம், வெள்ளி 40 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் யுஎஸ்ஏ டாலர்- 6, மலேசியா ரிங்கட்-5 ஆகியவை இருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai