சுடச்சுட

    

    தேவநாதசுவாமி கோயிலில் பகல்பத்து இராப்பத்து உத்ஸவம் தொடக்கம்

    By DIN  |   Published on : 29th December 2016 03:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    வைணவத் திருத்தலங்களில்  ஒன்றான, கடலூரை அடுத்துள்ள  திருவந்திபுரம் தேவநாத சுவாமி பெருமாள்  கோயிலில் பகல் பத்து உத்ஸவம் வியாழக்கிழமை (டிச.28) தொடங்கி ஜனவரி 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    பின்னர், ஜனவரி 8-ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், அன்றைய தினத்தில் இருந்து இராப்பத்து உத்ஸவம் தொடங்கி ஜனவரி
    17-ஆம் தேதி வரை நடைபெற  உள்ளது.
    ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் தகுந்த  ஏற்பாடுகளை செய்து வருவதாக தக்கார்  உதவி ஆணையர் சி.ஜோதி, செயல் அலுவலர் ராஜாசரவணக்குமார் தெரிவித்தனர்.  இதேபோல, பண்ருட்டி  வரதராஜ பெருமாள், திருவதிகை சரநாராயண பெருமாள், ரங்கநாத பெருமாள், கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோயில், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி, குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேச பெருமாள்  கோயில்களில் பகல் பத்து உற்சவம் நடைபெற உள்ளது.
    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய  அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து  வருகின்றனர்.
    அமாவாசை வழிபாடு: மார்கழி அமாவாசையை முன்னிட்டு பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சரநாராயண பெருமாள் ரங்கமன்னராகவும், ஸ்ரீதேவி ஆண்டாளாகவும் காட்சியளித்தனர். உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறையில்  காட்சி தந்தார்.
    ஹனுமன் ஜெயந்தி: ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. திருவதிகை சரநாராயண பெருமாள்  கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் யோக ஆஞ்சநேயராக சிறப்பு அலங்காரத்தில்  காட்சியளித்தார்.  திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai