சுடச்சுட

  

  அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், பொறியாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், தொலைத்தொடர்பு பொறியாளர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை தர்னா நடத்தினர்.
  கடலூர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர்  அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே.தனசேகர் (AI BSNL EA) தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.விஸ்வலிங்கம் (AI BSNL EA)  வரவேற்றார். மாவட்டத் தலைவர் புதுச்சேரி எஸ்.சதாசிவம் (AI BSNL EA) முன்னிலை வகித்தார்.
  மாவட்ட துணைத் தலைவர்  எஸ்.நடராஜன் (AI BSNL EA),தொடக்கவுரை நிகழ்த்தினார்.   மாவட்டச் செயலர் ஆர்.ஸ்ரீதர் NFTE, துணைச் செயலர் ஆர்.வி.ஜெயராமன் BSNL EU உம வாழ்த்துரை வழங்கினர்.  மாவட்டச் செயலர் எஸ்.ஆனந்த் (AI BSNL EA) கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
  இதில், 42 சதவீத வாக்குகள் பெற்ற அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்துக்கு இரண்டாவது பெரிய சங்கம் என்றும், முதல் சங்கத்துக்கு நிகரான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். 1.1.2007-க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.22,820 என அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். 30 சதவீத ஓய்வூதிய பலனை பிஎஸ்என்எல்-லால் நேரடியாக பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும். பதவி உயர்வில் கான் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai