சுடச்சுட

  

  பெட்ரோல் நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை பயன்பாட்டில் கவனம் தேவை: ஆட்சியர்

  By DIN  |   Published on : 29th December 2016 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெட்ரோல் நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை பயன்பாடு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாட்டில் அதன் உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் அறிவுறுத்தினார்.
  இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  நாட்டின் அனைத்து இடங்களிலும் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை ஊக்குவிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுரையின்படி அனைத்து இடங்களிலும் மொபைல் வேலட் (ஙர்க்ஷண்ப்ங் ரஹப்ப்ங்ற்), ஸ்வைப் இயந்திரம் (டர்ண்ய்ற் ர்ச் நஹப்ங்) போன்ற வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 130 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் இந்த வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புக் கழகம் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும்போதும், நிரப்பிய பிறகும் பணம் செலுத்துவதற்காக எரிபொருள் நிரப்பும் இடத்திலிருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் மொபைல் வேலட் மற்றும் பந்து முனை இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது எனவும், இந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதிக்கு அப்பால் மட்டுமே பணம் செலுத்துவதற்கு மேற்கண்ட வசதிகளை பயன்படுத்தலாம்  எனவும் அறிவுறுத்தியுள்ளது.
  எனவே, மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பொதுமக்களும், பெட்ரோல் நிலைய உரிமையாளர்களும் எரிபொருள்கள் நிரப்பும்போதும், நிரப்பிய பிறகும் எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் பணம் செலுத்துவதற்காக மொபைல் வேலட், பந்து முனை இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தாமல் தவிர்த்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று  அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai