சுடச்சுட

  

  விருத்தாசலம் வட்டம், கோ.ஆதனூரில்  பெண் குழந்தைகள் காப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
  பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்  குறைவாக உள்ள 100 மாவட்டங்களில், கடலூர் மாவட்டமும் ஒன்றாகும்.
  பெண் குழந்தைகள் விகிதத்தை கடலூர் மாவட்டத்தில் சமன்படுத்துவதற்காக  அரசு பல்வேறு விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
  இதன் ஒரு பகுதியாக, கம்மாபுரம் ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், அதன் அலுவலர் கிரிஜா தலைமையில் கோ.ஆதனூர் ஊராட்சியில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் பள்ளி மாணவிகள் மற்றும்  கிராம பெண்களிடையே விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai