சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே மயானப் பாதை தொடர்பாக பிரச்னை எழுந்ததைத் தொடர்ந்து, வட்டாட்சியர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார்.
   பண்ருட்டி வட்டம், சாத்திப்பட்டு ஊராட்சி, துண்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இவருக்குச் சொந்தமான நிலம் கீழ்மாம்பட்டு ஊராட்சி முத்தரசன்குப்பத்தில் உள்ளது. இவரது மூதாதையர்கள் நிலத்தின் வழியே மயானத்திற்குச் செல்ல வழி விட்டிருந்தனராம்.
  மேற்படி இடத்தில், மயானத்திற்குச் செல்ல சாலை அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காசி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளாராம். மேலும், மயானத்திற்குச் செல்ல முடியாதபடி பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி வைத்துள்ளார்.
  இந்த நிலையில், முத்தரசன்குப்பத்தைச் சேர்ந்த வீரபெருமாள் புதன்கிழமை காலை காலாமானார். இவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், முத்தரசன்குப்பம் கிராம பொதுமக்கள்  பண்ருட்டி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
  இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டாட்சியர் விஜய்ஆனந்த், காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர், காசியிடம் பேச்சு வார்த்தை நடத்தி மயானத்திற்கு உடலை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
   மேலும், இது தொடர்பாக ஜனவரி 10-ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai