சுடச்சுட

  

  சென்னையில் புயலால் சேதமடைந்த  பணிகளை மறு சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரியத் தொழிலாளர்களுக்கு, வாரிய உத்தரவுப்படி மும்மடங்கு ஊதியம் வழங்கக் கோரி, மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில், கேப்பர் மலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சிறப்புத் தலைவர் எஸ்.முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் டி.பழனிவேல், மாவட்டச் செயலர் என்.தேசிங்கு, பொருளர் என்.கோவிந்தராசு, மாவட்ட துணைத் தலைவர்கள் என்.ஜெயராமன், எஸ்.சேகர், எஸ்.ரவிச்சந்திரன், டி.ராஜகோபால், வி.ஞானசந்திரன், ஜி.ரவிச்சந்திரன், இணைச் செயலர்கள் எஸ்.பன்னீர்செல்வம், எஸ்.தமிழ்வாணன், டி.ஜீவா, ஆர்.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
  இதில், கடலூர் மின்வட்ட ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும், சென்னையில் புயலால் சேதமடைந்த பணிகளை மறு சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய தொழிலாளர்களுக்கு, வாரிய உத்தரவுப்படி மும்மடங்கு ஊதியம் வழங்க வேண்டும், மின்மாற்றி வைத்தல், கம்பம் நடுதல் போன்ற விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள மற்ற மின் வட்டங்களை போல் ஷிப்ட் ஒப்பந்தம் முறையில் ஒப்பந்த ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai