சுடச்சுட

  

  வடலூர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் கலையரங்கில், யோகா பட்டயப் படிப்புக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் சார்பில், யோகா முதுகலைப் பட்டயப் படிப்புக்கான பயிற்சி வகுப்புகள் டிச.27-இல் தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்து, யோகா பயிற்சி வகுப்பினை தொடக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்  சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் வி.சந்திரசேகர், பி.செந்தில் ஆகியோர் யோகா செய்முறை விளக்கம் அளித்தனர்.
  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.ராஜசேகர், கே.சதீஷ்குமார் செய்திருந்தனர். உடல்கல்வி ஆசிரியர்கள் ஆர்.ராமமூர்த்தி, எம்.சுப்பிரமணியன், ஏ.ஜெயராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.
  பயிற்சி வகுப்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு மூச்சுப் பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரம்  பயிற்சிகளை செய்தனர்.
  ஆசிரியர் ரா.செந்தில்குமார் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai