சுடச்சுட

  

  கடலூரை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   புதிய ஆட்சியர் அலுலவகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் ஜி.மாதவன், எஸ்.துரைராஜ் தலைமை வகித்தனர்.
  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பொருளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.பி.தண்டபாணி, பொருளர் ஏ.செல்லப்பா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
   போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலர் பி.கருப்பையன், பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கார்மாங்குடி வெங்கடேசன், பி.ரவீந்திரன், குமரகுரு  உள்ளிட்டோர் பேசினர்.
   அப்போது, மழையில்லாமல் கருகிப் போன பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், நெல் ஏக்கருக்கு ரூ.25,000, கரும்பு ஏக்கருக்கு ரூ.50,000, மானாவாரி பயிர்களுக்கு ரூ.10,000, தரிசு நிலங்களுக்கு ரூ.10,000 நிவாரணமாக வழங்க வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், ஊரக வேலைத் திட்ட பணி நாள்களை 250 நாள்களாக உயர்த்தி ரூ.300 ஊதியம் வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
   ஆட்சியர் அலுவலகம் முன் வெயிலில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். நாற்காலி, பந்தல் போட போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. பின்னர், பிற்பகல் 1.30 மணி அளவில் அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.  மாலை 5.30 மணி அளவில் காத்திருப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸார் கைது செய்து, கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai