Enable Javscript for better performance
காவல் துறை மரியாதையுடன் எஸ்.ஐ. சடலம் அடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறை மரியாதையுடன் எஸ்.ஐ. சடலம் அடக்கம்

    By நெய்வேலி,  |   Published on : 30th December 2016 08:17 AM  |   அ+அ அ-   |    |  

    பணியின்போது உடல் நலக் குறைவால் உயிரிழந்த உளுந்தூர்பேட்டை எஸ்.ஐ., சடலம் சொந்த ஊரில் காவல் துறையினரின் மரியாதையுடன் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
     பண்ருட்டி வட்டம், பழைய பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சண்முகவேல் (40). விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு பணியிலிருந்தபோது, வாந்தி-மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
     இதையடுத்து அவரது சடலம், சொந்த ஊரான பழைய பிள்ளையார்குப்பத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், அங்குள்ள மயானத்தில், உளுந்தூர்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீஸாரின் மரியாதையுடன் சண்முகவேலின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai