சுடச்சுட

  

  திட்டக்குடியை அடுத்த டி.இளமங்கலத்தில் டெங்கு தடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
   மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராஜசேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோரது மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், பூவராகன், துரைராஜ், கலியபெருமாள், ராஜபிரபு, சங்கர், தேவகிருஷ்ணன் மற்றும் 36 தாற்காலிகப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
   இதற்காக 9 குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடு, வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், நிலவேம்புக் குடிநீர், மலைவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.
   கிராமம் முழுவதும் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து (படம்) அடிக்கப்பட்டதோடு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரை குளோரினேஷன் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai