Enable Javscript for better performance
பாரத பரிக்ரம யாத்திரைக் குழு சிதம்பரம் வருகை- Dinamani

சுடச்சுட

    

    பாரத பரிக்ரம யாத்திரைக் குழு சிதம்பரம் வருகை

    By சிதம்பரம்,  |   Published on : 30th December 2016 08:18 AM  |   அ+அ அ-   |    |  

    உலக நன்மை வேண்டி பாத யாத்திரை மேற்கொண்டுள்ள சீதாராம் சுவாமிஜியின் பாரத பரிக்ரம யாத்திரைக் குழுவினர் புதன்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர்.
     உலக நன்மை வேண்டி சீதாராம் சுவாமிஜி கடந்த 4 வருடங்களாக கன்னியாகுமரி முதல் இமயம் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். அவரது தலைமையிலான குழுவினர், மீண்டும் கன்னியாகுமரி திரும்பும் வழியில், புதன்கிழமை சிதம்பரம் நகருக்கு வந்து சேர்ந்தனர்.
     பின்னர் சீதாராம் சுவாமிஜி நடராஜர் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். கோயில் பொது தீட்சிதர் உ.வெங்கடேச தீட்சிதர் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து பிரசாதம் வழங்கினார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பாளர் ஜோதி.குருவாயூரப்பன், நிர்வாகிகள் கார்த்தி, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai