சுடச்சுட

  

  ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயில்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
   தொமுச தலைவர் பி.பழனிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்துக் கழக வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். ஊழியர்களிடமிருந்து பல்வேறு வகைகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5,000 கோடியை திருப்பி வழங்க வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து, 50 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
   ஓய்வூதியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு, 1.4.2003-க்கு பின் பணி நியமனம் செய்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் கோட்ட பணிமனை முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   கோரிக்கைகளை விளக்கி தொமுச இணைச் செயலர் தங்க.ஆனந்தன், சிஐடியூ நிர்வாகிகள் ஜி.பாஸ்கரன், ஏ.ஜான்விக்டர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி செயலர் ரா.மணிமாறன், பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலர் ரா.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தொழிற்சங்க துணைப் பொதுச் செயலர் எஸ்.கருணாநிதி, தேமுதிக தொழிற்சங்க பொதுச் செயலர் டி.ஆர்.தண்டபாணி உள்ளிட்டோர் பேசினர்.
   முன்னதாக, பாட்டாளி தொழிற்சங்கத் தலைவர் டி.ஜெய்சங்கர் வரவேற்க, சிஐடியூ துணை பொதுச் செயலர் பி.எழிலரசன் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai